பாலியல் உணர்வுகளை தூண்டும் மருந்து : போலி மருந்துகளை கொடுத்து ஏமாற்றிய கும்பல்
டெல்லி: டெல்லி அருகே கால்சென்டர் நடத்தி பாலியல் உணர்வுகளை தூண்டும் மாத்திரைகள் என போலி மாத்திரைகளை விற்ற கும்பல் சிக்கியுள்ளது. ஹரியானா மாநிலம் குர்கான் உத்தியோபிகர் பேச் 5 உள்ள ஒரு கட்டிடத்தின் அடித்தடத்தில் இருந்து ஒரு கால் சென்டர் செயல் பட்டு வந்துள்ளது.
இந்த கால் சென்டரில் இருந்து பாலியல் உணர்வுகளை தூண்டும் மாத்திரை மருந்துகள் விற்பதாக கூறி ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருவதாக குர்கான் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதை அடுத்து போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பியூஸ் குமார் என்பவர் இந்த கால் சென்டரை நடத்தி வந்தது தெரியவந்தது.
அதில் மூன்று பெண்கள் உட்பட பத்துபேர் பணியாற்றி வந்தனர். அவர்கள் அனைவரையும் பிடித்து விசாரித்த போது திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த கும்பல் இன்ஸ்டா, பேஸ்புக்கில்
பாலியல் உணர்வுகளை தூண்டும் மாத்திரை உள்ளதாக விளம்பரம் கொடுத்துள்ளது.
அதை பார்த்த ஆர்வம் உள்ளவர்கள் கிளிக் செய்தால் அதில் ஒரு கூகுள்போர்ம் இணைக்க பட்டிருக்கும் அதில் விவரங்களை பதிவு செய்தால் இந்த கால் சென்டரில் இருந்து பேசி மாத்திரை மருந்துகள் விற்பனை செய்துள்ளனர்.
பல ஆயிரம் கொடுத்து மருந்துகளை வாங்கியவர்கள் அதனை பயன்படுத்திய நிலையில் பலன் இல்லை இதனால் ஒன்லைன் மூலம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதை அடுத்து தான் இந்த கும்பல் சிக்கி உள்ளது. இந்த கும்பல் வெளியில் இருந்து 50 ,100 ரூபாய்க்கு கெல்சிம், வைட்டமின் மருந்து மாத்திரைகளை வாங்கி நவின பேக்கில் அடைத்து பாலியல் உணர்வுகளை தூண்டும் மருந்துகள் என பலாயரத்துக்கு விற்றுள்ளனர்.
இதற்காக விருப்பம் தெருவிப்பவர்களை கால் சென்டரில் இருந்து மூன்று பெண்களும் போன் செய்து முளை சிலவுகளை செய்து மருந்துகளை விற்பனை செய்துள்ளனர். கால் சென்டரில் பணியாற்றிய பத்துபேருக்கும் 15,000 முதல் 20,000 ரூபாய் வரை சம்பளம் கொடுத்த பியூஸ் குமார் அதிக மருந்துகள் விற்பனை செய்பவர்களுக்கு கமிஷன் இன்சென்டிவ் என கொடுத்ததும் அம்பலம் ஆகியுள்ளது.
இதை அடுத்து மோசடி கும்பலை கைதுசெய்த குர்கான் போலீசார் அவர்களிடம் இருந்து 13 மொபைல் போன்கள் 54 போலி பாலியல் மேம்பாட்டு கேப்ஸுல்கள் கொண்ட பேட்டிகள் மற்றும் 35 சிறிய என்னை ஸ்ப்ரே பாட்டில்கள் ஆகிய வற்றை மீட்டனர்.