மாணவருக்கு பாலியல் தொந்தரவு உதவி வார்டனுக்கு 25 ஆண்டு சிறை
தேனி: தேனி மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஒன்றில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர் விடுதியில் தங்கி படித்தார். இந்த மாணவருக்கு கடந்த 2023ல் விடுதி உதவி வார்டன் முகிலன் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து முகிலனை கைது செய்தனர்.
இந்த வழக்கை தேனி மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி கணேசன் விசாரித்து, முகிலனுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட மாணவரின் நலனை கருத்தில் கொண்டு ரூ.3 லட்சம் இழப்பீடாக அரசு வழங்கவும் உத்தரவிட்டார்.