பாலியல் வழக்கில் முன்னாள் எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு விதித்த ஆயுள் தண்டனையை நிறுத்திவைக்க ஐகோர்ட் மறுப்பு
பெங்களூரு: பாலியல் வழக்கில் முன்னாள் எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு விதித்த ஆயுள் தண்டனையை நிறுத்திவைக்க கர்நாடக ஐகோர்ட் மறுத்திவிட்டது. உதவி கேட்டு வந்த பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டியதாக பிரிஜ்வால் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கர்நாடக நீதிமன்றம் பிரஜ்வாலுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது. தனக்கு விதித்த ஆயுள் தண்டனையை நிறுத்திவைத்து, ஜாமின் வழக்கக்கோரி கர்நாடக ஐகோர்ட்டில் பிரஜ்வல் மனு தக்கல் செய்திருந்தார். பிரஜ்வால் ரேவண்ணாவின் மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Advertisement
Advertisement