சென்னையில் இரண்டு சிறுவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை: செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
செங்கல்பட்டு: சென்னை கண்ணகி நகர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட சுமார் 8 மற்றும் 5 வயதுடைய சிறுவர்கள் இருவரும் அவரது தாயாருடன் வசித்து வருகிறார்கள். இந்த சிறுவர்களின் அப்பா சிறுவர்களின் தாயைவிட்டு பிரிந்து வாழ்கிறார். இந்நிலையில் சிறுவர்களின் தாய் விடுமுறை நாட்களில் மகன்களை அவர்களது பாட்டி வீட்டிற்கு அனுப்புவது வழக்கம். பாட்டி வீட்டின் அருகில் கோபிநாத் (37) என்பவர் வசித்து வருகிறார்.
கோபிநாத் சிறுவர்களை பாலியல் தாக்குதல் செய்யும் நோக்கத்துடன் சாக்லெட் தருவதாக கூறி சிறுவர்களை தனது வீட்டிற்கு அழைத்துச்சென்று சென்று சிறுவர்களுக்கு ஆபாச படம் காண்பித்து சிறுவர்களை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டி தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் 10.09.2016ஆம் தேதி இரண்டு சிறுவர்களில் ஒரு சிறுவன் பள்ளிக்கு செல்லாமல் அழுது கொண்டிருந்த போது சிறுவனின் தாய் எதற்காக அழுகிறாய் என கேட்டபோது மலம் கழிக்கும் இடத்தில் வலிப்பதாக அழுது கொண்டே கூறியுள்ளார்.
மேலும் சிறுவர்களை துருவி துருவி விசாரித்ததில் தங்களுக்கு நடந்த கொடுமைகளை சிறுவர்கள் தாயிடம் கூறியுள்ளனர். உடனே சிறுவர்களின் தாயார் இது குறித்து கண்ணகிநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் மேற்படி காவல்நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோபிநாத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கை செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த போக்சோ நீதிமன்ற நீதிபதி நசீமாபானு குற்றம் சாட்டப்பட்ட கோபிநாத் குற்றவாளி என நிரூபனமானதால் அவருக்குஇரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதம் விதித்து இந்த தண்டனைகளை கோபிநாத் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும் இவ்வழக்கில் பாதிக்கப்பட்டசிறுவர்களுக்கு தலா ரூ.5லட்சம் இழப்பீடு வழங்கக்கோரி தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.