ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் பாலியல் தொழில் நடத்திய புரோக்கர் அதிரடி கைது: 2 இளம்பெண்கள் மீட்பு
Advertisement
சென்னை: சென்னை பெரம்பூர் மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் உள்ள வணிக வளாகத்தில் ரியல் எஸ்டேட் அலுவலகம் இயங்கி வருகிறது. ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் பாலியல் தொழில் நடப்பதாக விபசார தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் யாஸ்மினுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விபச்சார தடுப்பு பிரிவு- 2 இன்ஸ்பெக்டர் தலைமையிலான குழுவினர் நேற்று வணிக வளாகத்தில் உள்ள ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது தி.நகர் பகுதியை சேர்ந்த சரவணசெல்வன்(57) என்பவர் ரியல் எஸ்டேட் என்ற பெயரில் அலுவலகம் தொடங்கி பாலியல் தொழில் நடத்தி வந்தது உறுதியானது. சரவண செல்வன் மீது ஏற்கனவே பாலியல் வழக்கு நிலுவையில் உள்ளது. இதையடுத்து சரவண செல்வனை கைது செய்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 2 இளம்பெண்களை மீட்டனர்.
Advertisement