ஊர்க்காவல் படை பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகள்
*தஞ்சை எஸ்.பி வழங்கினார்
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்ட ஊர்க்காவல் படை பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளிநர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி எஸ்.பி.அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. அப்போது, எஸ்.பி.ராஜாராம் பணி நியமன ஆணைகளை வழங்கி, புதிய ஆளிநர்கள் மக்கள் சேவையில் முழுமையாக ஈடுபட்டு மாவட்ட பாதுகாப்பு பணிகளில் சிறப்பாக பங்கு பெற வேண்டும் என உரையாற்றினார்.
நிகழ்வில் தஞ்சை சரக தளபதி முஹம்மது இர்ஷாத் மற்றும் மாவட்ட மண்டல தளபதி ரமேஷ்பாபு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதனை ஒருங்கிணைக்க சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெமினி கணேசன், தலைமை காவலர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், கும்பகோணத்தைச் சேர்ந்த மனோகர், கார்த்திகேயன், தஞ்சாவூரைச் சேர்ந்த ஆளிநர்கள் செல்வகுமார், சங்கர், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த படைப்பிரிவு தளபதி நாடி முத்து மற்றும் மணிகண்டன் ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.
மகளிர் பிரிவு உதவி படைப்பிரிவு தளபதி மாலா மற்றும் ராணி ஆகியோர் நிகழ்வில் இனிதாக ஒத்துழைப்பு வழங்கினர். மாவட்ட பாதுகாப்பில் ஊர்க்காவல் படையின் பங்கு பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைக் குறித்து அதிகாரிகள் எடுத்துரைத்தனர். புதிய ஆளிநர்கள் மக்கள் நலனில் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என அவர்கள் ஊக்கமளித்தனர்.