செருப்பனோடை அருகே நிலம் இரண்டாக பிளந்ததால் கொடைக்கானல் பகுதி மக்கள் அதிர்ச்சி!!
திண்டுக்கல்: செருப்பனோடை அருகே நிலம் இரண்டாக பிளந்ததால் கொடைக்கானல் பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொடைக்கானல் மேல்மலை கிராமமான கிளாவரை பகுதியில் கடந்த ஆண்டு 300 அடிக்கு நிலம் பிளந்துள்ளது. கடந்த ஆண்டு 300 அடிக்கு ஏற்பட்ட நிலப் பிளவு மேலும் 200 அடிக்கு நிலம் பிளந்துள்ளது. நிலப் பிளவால் கிளாவரை பகுதிக்கு செல்லும் தண்ணீர் தடைபட்டுள்ளதால் பாசனம், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நிலப்பிளவு குறித்து கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement
Advertisement