வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் குளறுபடி நடப்பதாக தேர்தல் அதிகாரியிடம் அதிமுக சார்பில் புகார்
சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் குளறுபடி நடப்பதாக தேர்தல் அதிகாரியிடம் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளித்துள்ளார். 'வாக்காளர் பட்டியலில் இருந்து யார் பெயரையும் அதிமுக நீக்க விடாது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்தான் கணக்கெடுப்பு படிவங்களை அளிக்க வேண்டும். தேர்தல் ஆணைய அறிவுறுத்தல்படி வாக்குச்சாவடி அலுவலர்கள் செயல்பட வேண்டும்' என ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார்.
Advertisement
Advertisement