செப்டம்பர் மாதத்துக்குள் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
03:20 PM Aug 11, 2025 IST
சென்னை: செப்டம்பர் மாதத்துக்குள் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த பல ஆண்டாக பாமக வலியுறுத்தி வருகிறது.