டெல்லி பாஜ மூத்த தலைவர் ஆம் ஆத்மியில் சேர்ந்தார்
Advertisement
புதுடெல்லி: டெல்லியில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பாஜவை சேர்ந்த பிரபல தலைவர்கள் பலர் கட்சியில் இருந்து விலகி ஆம் ஆத்மியில் இணைந்து வருகின்றனர். இது பாஜவுக்கு பின்னடைவாக கருதப்படுகின்றது. மூன்று முறை எம்எல்ஏவாக இருந்த , முன்னாள் எம்எல்ஏ பிரம் சிங் தன்வார் கடந்த வாரம் பாஜவில் இருந்து விலகி ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.
இதனை தொடர்ந்து தற்போது இரண்டு முறை மாநகராட்சி கவுன்சிலராக இருந்த பி.பி தியாகி பாஜவில் இருந்து வெளியேறி இருக்கிறார். தியாகி நேற்று ஆம் ஆத்மி கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, எம்எல்ஏ துர்கேஷ் பதக் ஆகியோர் முன்னிலையில் தியாகி ஆம் ஆத்மியில் இணைந்தார்.
Advertisement