செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததற்கு பாஜ அழுத்தமே காரணம்: நடிகர் எஸ்.வி.சேகர் சொல்கிறார்
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் தவெகவில் இணைந்ததற்கு பாஜ அழுத்தமே காரணம் என்று நடிகர் எஸ்.வி.சேகர் கருத்து தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார். அதைத் தொடர்ந்து நடிகர் எஸ்.வி.சேகர் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் பேசியதாவது: செங்கோட்டையன் இந்த தவறை செய்வதற்கு பாஜகவினரால் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளார் என்பது என்னுடைய கருத்து. அவர் உள்துறை அமைச்சர் அமித்ஷா உட்பட அனைவரையும் சென்று பார்த்துள்ளார். செங்கோட்டையன் தலைமை தாங்கி அதிமுகவை நடத்துவது என்பது அவர்களுக்கு விருப்பமில்லை. தமிழ்நாட்டில் திமுகவை நம்மால் ஒழிக்க முடியாது, அதற்கு என்ன பண்ண முடியும்.
திமுகவிற்கு எதிராக யாரை பேசுகிறார்கள் அதிமுகவைதான். அதற்கு அதிமுகவை ஒழித்து விட்டால், திமுக, பாஜ அப்படி தானே பேசி ஆக வேண்டும், அவர்களுக்கு களநிலவரம் தெரியாது. அமித்ஷா எவ்வளவு பெரியவராக இருந்தாலும், டெல்லியிலே இருந்தாலும் குண்டு வெடித்த பிறகு தானே அமித்ஷாவுக்கே தெரிந்தது அதை தடுக்கவில்லையே போலீசார் எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும், சிலசமயம் திருடர்கள் அவர்களை விட புத்தசாலிகள், பாஜகவுக்கு அதிகார போதை கண்ணை மறைக்கிறது. இவ்வாறு கூறியுள்ளார்.