செங்கோட்டையனின் அனுபவம் உறுதுணையாக இருக்கும்: நடிகர் விஜய் வீடியோ வெளியிட்டு பேச்சு
சென்னை: தவெகவில் செங்கோட்டையன் இணைந்திருப்பது கட்சிக்கு உறுதுணையாக இருக்கும் என அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்த செங்கோட்டையனை வரவேற்று விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் விஜய் கூறியிருப்பதாவது: 20 வயது இளைஞனாக இருக்கும்போதே எம்ஜிஆரை நம்பி அவரின் மன்றத்தில் இணைத்து அந்த இளம்வயதிலேயே எம்எல்ஏ என்கிற பெரிய பொறுப்பை ஏற்றவர். அந்த இயக்கத்தின் இரு பெரும் தலைவர்களுக்கு நம்பிக்கைக்கு உரியவராக அரசியல் களத்தில் இருந்தவர்.
50 ஆண்டுகள் ஒரே இயக்கத்தில் இருந்த அண்ணன் செங்கோட்டையனின் அரசியல் அனுபவமும், களப்பணியும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் அவரையும் அவருடன் கட்சியில் இணைபவர்களையும் மக்கள் பணியாற்ற வரவேற்கிறேன். இவ்வாறு அந்த வீடியோவில் விஜய் தெரிவித்துள்ளார்.