தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செங்கோட்டையன் நீக்கப்பட்ட நிலையில் எடப்பாடி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் காரசார விவாதம்

* கூட்டணிக்கு கட்சிகள் வராத நிலையில் விரக்தியில் முடிந்த கூட்டம்

Advertisement

* கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க வாய்ப்பில்லை

சென்னை: அதிமுகவில் இருந்து மூத்த தலைவர் செங்கோட்டையன் நீக்கம் மற்றும் உட்கட்சி மோதல் அதிகரித்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க வாய்ப்பு இல்லை என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் அதிமுக கூட்டணிக்கு எந்த கட்சியும் வராதது, உள்கட்சி மோதல் குறித்து காரசாரமாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, அக்கட்சியின் அமைப்பு செயலாளராகவும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராகவும், கோபிசெட்டிப்பாளையம் தொகுதி எம்எல்ஏவுமான கே.ஏ.செங்கோட்டையன் கடந்த சில மாதங்களாக போர்க்கொடி தூக்கி வந்தார். இதற்கு காரணம், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி தலைமையில் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. அதனால், 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்றால் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று கே.ஏ.செங்கோட்டையன் கடந்த செப்டம்பர் மாதம் 5ம் தேதி பகிரங்கமாக கோரிக்கை வைத்தார். அதை நடைமுறைப்படுத்த 10 நாள் கெடு விதிப்பதாகவும் எடப்பாடிக்கு எச்சரிக்கை விடுத்தார்.

இதையடுத்து செங்கோட்டையன் அதிமுகவில் வகித்து வந்த அமைப்பு செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக செப்டம்பர் 6ம் தேதி எடப்பாடி அறிவித்தார். இந்த பரபரப்பான சூழ்நிலையில், கடந்த 30ம் தேதி, பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி, குருபூஜை விழாவில் ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் ஒன்றாக இணைந்து, தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் அங்கு சசிகலாவையும் சந்தித்தனர்.

இதனால் கோபம் அடைந்த எடப்பாடி பழனிசாமி, “அதிமுகவுக்கு யார் துரோகம் செய்தாலும் தலைமையின் கருத்தை முழுமையாக கடைபிடிக்காவிட்டால் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்தார். எச்சரித்ததோடு நிற்காமல், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்கு பதிலடி கொடுத்து செங்கோட்டையன், “எடப்பாடி பழனிசாமி என்னை திமுகவின் ‘பி’ டீம் என்று கூறி வருகிறார். கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடிதான் ‘ஏ ஓன்’ என்றும், துரோகத்திற்காக எடப்பாடி பழனிசாமிக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்” என்றார்.

செங்கோட்டையன் போன்று ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா போன்றோர் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். இன்னொரு பக்கம், பாஜக மேலிட தலைவர்களும் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். இதுபோன்ற பல்வேறு பிரச்னையில் எடப்பாடி சிக்கி தவித்து வருகிறார். இந்த பரபரப்பான சூழ்நிலையில், சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அதிமுக மூத்த உறுப்பினர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார் உள்ளிட்ட 82 அதிமுக மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். அதிமுகவில் இருந்து மூத்த தலைவர் கே.ஏ.செங்கோட்டையன் நீக்கப்பட்ட நிலையிலும், அதிமுகவில் உட்கட்சி பூசல் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் நேற்று நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அதிமுக மாவட்ட செயலாளர்கள், தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது.

அதனால் கட்சியை பலப்படுத்தவது மற்றும் கூட்டணியை இறுதி செய்வது உள்ளிட்ட பணிகளை அதிமுக தலைமை விரைந்து எடுக்க வேண்டும். தற்போது ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், செங்கோட்டையன், சசிகலா உள்ளிட்டோர் ஓரணியில் இணைந்துள்ளனர். இது தேர்தலில் அதிமுக வெற்றி வாய்ப்பை பாதிக்காத வகையில் தலைமை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர். மேலும் கூட்டணிக்கு பல கட்சிகள் வரும் என்று எடப்பாடி பழனிசாமி கூறி வந்தநிலையில், நடிகர் விஜய் உள்பட யாரும் அதிமுகவை கண்டு கொள்ளாததால் கூட்டத்தில் பலரும் அதிருப்தியும், விரக்தியும் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “சட்டமன்ற தேர்தல் கூட்டணியை கட்சி தலைமை பார்த்துக்கொள்ளும். கூட்டணி குறித்து யாரும் கருத்து தெரிவிக்க வேண்டாம். அதேநேரம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை கட்சியில் மீண்டும் சேர்க்க வாய்ப்பே இல்லை. அதற்கான முயற்சிகளில் நிர்வாகிகள் ஈடுபட வேண்டாம். தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் நடைபெற்று வருகிறது. இது மிகவும் முக்கியமான பணி என்பதாலும், வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை சரிசெய்வதற்கு இது சரியான தருணம் என்பதாலும் இதில் அனைத்து மாவட்ட செயலாளர்களும், அந்தந்த மாவட்ட பகுதி, வட்ட செயலாளர்களுடன் இணைந்து செயல்பட்டு, போலி வாக்காளர்களை தவிர, தற்போது வாக்காளர்களாக உள்ளவர்களின் பெயர்கள் நீக்கப்படாமல் இருக்க தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். தேர்தல் நெருங்குவதால் பூத் கமிட்டி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அதிமுக - பாஜக கூட்டணி ஏற்பட்டுள்ளதால் தமிழக பாஜக தலைவர்களை யாரும் விமர்சிக்க வேண்டாம்” என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

* விஜய் முதல்வர் வேட்பாளரா? மக்கள் தான் தீர்மானிக்கனும்

அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் முடிந்ததும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமை செயலகம் வந்து, தேர்தல் அதிகாரியிடம் ஒரு மனு அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, “திமுகவுக்கும், தவெக-வுக்கும் இடையேதான் போட்டி என்று மீண்டும் விஜய் சொல்லி இருப்பது பற்றி கேட்கிறீர்கள்... ஒரு கட்சி ஆரம்பிக்கிறார்கள் என்றால் அந்த கட்சியின் தலைவர் ஒரு தனித்தன்மையோடு இருக்க வேண்டும் என்றுதான் யாராக இருந்தாலும் விரும்புவார்கள். அந்த அடிப்படையில் தவெக கட்சி ஒரு தனித்தன்மையுடன் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் அவர் ஒரு அறிவிப்பை வெளியிடுகிறார், அதாவது எங்கள் தலைமையில்தான் கூட்டணி என்கிறார். நாங்கள் என்ன சொல்கிறோம், எங்கள் தலைமையில்தான் கூட்டணி என்று. அவர் கட்சி கருத்து அது, எங்க கட்சி கருத்து இது. முதல்வர் வேட்பாளர் விஜய் என்பது அவர்களின் கருத்து. அதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்றார்.

Advertisement