10 நாள் கெடு விதித்த செங்கோட்டையனை அதிமுக பதவியில் இருந்து நீக்கினார் எடப்பாடி பழனிசாமி
சென்னை: 10 நாள் கெடு விதித்த செங்கோட்டையனை அதிமுக பதவியில் இருந்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கினார். அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 13 பேரின் பதவி பறிக்கப்பட்ட நிலையில் மேலும் 40 பேரின் பதவிகள் பறிக்கப்பட்டது. ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட பொருளாளர் கந்தவேல் முருகன் உள்ளிட்ட 40 பேரின் கட்சி பதவி பறிக்கப்பட்டுள்ளது. அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு, செங்கோட்டையன் கெடு விதித்திருந்தார்.
Advertisement
Advertisement