செங்கோட்டையனுக்கு என்ன அங்கீகாரம் தவெக கொடுக்குதுனு பார்ப்போம்: துரை.வைகோ
திருச்சி: திருச்சியில் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை.வைகோ எம்பி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: செங்கோட்டையன் ஒரு மூத்த அரசியல்வாதி. அதிமுக என்ற மிகப்பெரிய இயக்கத்தில் இருந்து தவெகவுக்கு சென்றுள்ளார். தவெக புதிய இயக்கம். செங்கோட்டையனுக்கு எப்படிப்பட்ட அங்கீகாரம் கொடுத்து அவரை செயல்பட வைக்கிறார்கள் என போகப்போகத்தான் தெரியும். அண்ணா சமாதியில் தவெக நிர்வாகிகள் மரியாதை செய்துள்ளனர். அண்ணாவை பொறுத்தவரை, அரசியல் இயக்கங்களுக்கு அப்பாற்பட்டு மக்களுக்காக உழைத்தவர். பெரியார், அண்ணா போன்றோர் இல்லை என்றால் தமிழ்நாடு கிடையாது. இந்தியாவில் முதன்மை மாநிலமாக தமிழகம் இருக்க காரணம் பேரறிஞர் அண்ணாவும், தந்தை பெரியாரும் தான். செங்கோட்டையன் அந்த இயக்கத்தில் சேர்ந்து அண்ணாவின் சமாதிக்கு தவெகவினரை அழைத்து சென்றதை நல்ல விஷயமாக பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement
Advertisement