செங்கோட்டையன் கோரிக்கை பற்றி அதிமுக பொதுச்செயலாளர்தான் முடிவு செய்வார்: ஜெயக்குமார் பேட்டி
சென்னை: செங்கோட்டையன் கோரிக்கை பற்றி அதிமுக பொதுச்செயலாளர்தான் முடிவு செய்வார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து, செய்தியாளர்கள் சந்திப்பில் ஜெயக்குமார் கூறியதாவது; எம்.ஜி.ஆர். படத்தை பயன்படுத்தினால் மட்டும் அதிமுக வாக்கு விஜய்க்கு சென்றுவிடாது. அதிமுக வாக்குகள் விஜய்க்கு கிடைக்கும் என நினைத்தால் ஏமாற்றமே மிஞ்சும் என அவர் தெரிவித்தார்.
Advertisement
Advertisement