இன்டர்நெட் இல்லாமல் பணம் அனுப்புவது எப்படி? .. அவசியம் தெரிஞ்சுக்கோங்க!
னிஃபைடு பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) என்பது இந்திய சந்தையில் ஒரு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. முன்பெல்லாம் நாம் எங்கு சென்றாலும் பணத்தை கையில் எடுத்துச்செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம். ஆனால், தற்போது டிஜிட்டல் பேமெண்ட் நம்முடைய வேலைகள் அனைத்தையும் சவுகரியமானதாக மாற்றி விட்டது. ஆனால், UPI டிரான்ஸாக்ஷன்கள் சில சமயங்களில் மோசமான இன்டர்நெட் இணைப்பு அல்லது பேங்க் சர்வர் பிரச்னைகள் காரணமாக தோல்வியடைய வாய்ப்புகள் உள்ளன. சரியான இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் UPI பேமெண்ட்களை செய்வதற்கு உங்களால் இயலவில்லை என்றால் USSD சேவை மூலமாக ஆஃப்லைன் முறையில் UPI பேமெண்ட்களை எப்படி செய்யலாம்? அதற்கும் வழி இருக்கிறது. அது இதோ...!
ஆஃப்லைன் UPI பேமெண்ட்களை செய்வதற்கு முன்பு உங்களுடைய வங்கியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர் உங்களிடம் இருப்பதை நீங்கள் உறுதிசெய்ய வேண்டும். அவ்வாறு செய்வதற்கு முதலில் உங்களுடைய நம்பர் வங்கி கணக்கில் இணைக்கப்பட்டு இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். மேலும், உங்களுடைய வங்கியின் அப்ளிகேஷன் அல்லது வெப்சைட் மூலமாக ஒரு UPI PIN -ஐ நீங்கள் அமைக்க வேண்டும். *99# - என்பது ஆஃப்லைன் UPI பேமெண்ட்டுகளை செய்வதற்கான எண் ஆகும். இதனை உங்களுடைய போன் டயலரில் நீங்கள் டைப் செய்யும் போது இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் UPI சேவைகளை பயன்படுத்துவதற்கான ஒரு மெனு திறக்கப்படும். இப்போது உங்களுக்கு வேண்டிய வங்கி கணக்கை தேர்வு செய்துவிட்டு பரிவர்த்தனை வகையையும் தேர்வு செய்யுங்கள்.
பணத்தை அனுப்புவதற்கு நீங்கள் பெறுநர் உடைய மொபைல் நம்பர், UPI ID அல்லது வங்கி அக்கவுண்ட் விபரங்களை என்டர் செய்ய வேண்டும். அதனோடு வங்கியின் IFSC குறியீட்டையும் என்டர் செய்யுங்கள். இதனை செய்த பிறகு எவ்வளவு தொகை நீங்கள் அனுப்ப வேண்டுமோ அதனை என்டர் செய்துவிட்டு, UPI PIN நம்பரை டைப் செய்யவும்.ஆனால், இந்த மாதிரி பரிவர்த்தனைகள் செய்வதற்கான அதிகபட்ச வரம்பு என்பது 5,000 ரூபாயாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் சிறிய அளவிலான கட்டணம் வசூலிக்கப்படும். இந்த அம்சத்தை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். விடுமுறை நாட்களிலும் இந்த அம்சம் செயலில் இருக்கும். மேலும் இது அனைத்து தொலைதொடர்பு நெட்வொர்க் மற்றும் மொபைல்களில் பயன்படுத்தப்படலாம். எனவே சரியான இன்டர்நெட் இணைப்பு இல்லாதபோது அல்லது வங்கியின் சர்வர் இயங்காத சமயங்களில் இந்த ஆஃப்லைன் UPI பேமெண்ட் செயல்முறையை பயன்படுத்தி, நினைத்த நேரத்தில் உங்களால் பேமெண்ட்களை செய்ய முடியும்.