ஆகஸ்ட் 23ம் தேதி அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் “எங்கள் கல்வி எங்கள் உரிமை” என்ற தலைப்பில் கருத்தரங்கம்: திமுக மாணவர் அணி அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள மாநிலக் கல்விக் கொள்கையின் சிறப்புகளையும் - தேசியக் கல்விக் கொள்கையின் தீமைகளையும் மாணவர்களிடையே எடுத்துச் செல்லும் நோக்கில் சென்னை ”அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில்” ஆகஸ்ட் 23 ஆம் தேதி, மாலை 4 மணிக்கு “எங்கள் கல்வி எங்கள் உரிமை” என்ற தலைப்பில் ”கருத்தரங்கம்” நடைபெறவுள்ளது.
தி.மு.க. மாணவர் அணிச் செயலாளர் இரா.ராஜீவ்காந்தி தலைமையில் மாநிலத் துணைச் செயலாளர்கள் மன்னை த.சோழராஜன், சேலம் இரா.தமிழரசன், அதலை பி.செந்தில்குமார், தமிழ் கா.அமுதரசன், பி.எம்.ஆனந்த், வி.ஜி.கோகுல், பூர்ணசங்கீதா சின்னமுத்து, ஜெ.வீரமணி, ஜெ.இராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி - மக்கள் நீதி மய்யத் தலைவர் - மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன் ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர்.
இந்தக் கருத்தரங்கில் கழக மாவட்ட, மாநகர ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்க் கழக மாணவர் அணி நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.