1983ம் ஆண்டே செமி கண்டக்டர்ஸ் லிமிடெட் செயல்பட தொடங்கியது: மோடிக்கு காங். பதிலடி
புதுடெல்லி: செமி கண்டக்டர் ஆலை குறித்த பிரதமர் மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் பதிவில், “மோடி தன் சுதந்திர தின உரையில் செமி கண்டக்டர் உற்பத்தி 50 60 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் ஆட்சியில் கருக்கொலை செய்யப்பட்டு விட்டதாக பேசினார். இது பிரதமர் மோடி எவ்வளவு பெரிய பொய்யர் என்பதற்கான எடுத்துக்காட்டு. சண்டிகரில் நிறுவப்பட்ட செமி கண்டக்டர்ஸ் காம்ப்ளக்ஸ் லிமிடெட் 1983ம் ஆண்டிலேயே செயல்பட தொடங்கியது” என தெரிவித்துள்ளார்.