தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செமிகண்டக்டர் துறையில் அடுத்தகட்டத்தை நோக்கி இந்தியா முன்னேறுகிறது: பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: இந்தியாவின் செமிகண்டக்டர் கட்டமைப்பை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ‘செமிகான் இந்தியா-2025’ மாநாட்டின் தொடக்க விழா டெல்லியில் நேற்று நடந்தது.

Advertisement

மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்து பேசியதாவது:

கருப்பு தங்கம் எனப்படும் கச்சா எண்ணெய் முந்தைய நூற்றாண்டை வடிவமைத்தது. தற்போது 21ம் நூற்றாண்டை டிஜிட்டல் வைரம் எனப்படும் சிறிய சிப்கள் தான் வடிவமைக்க உள்ளன. அளவில் சிறிதாக இருந்தாலும் இந்த சிப்கள் உலகளாவிய முன்னேற்றத்தை கணிசமாக துரிதப்படுத்தும். உலக செமிகண்டக்டர் துறை ஏற்கனவே 600 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டி உள்ளது. வரும் ஆண்டுகளில் 1 டிரில்லியன் டாலர்களை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இந்தியா குறிப்பிடத்தக்க பங்கை கொண்டிருக்கும்.

கடந்த 2021ல் செமிகான் திட்டத்தை தொடங்கிய இந்தியா, 2023ல் ஒப்புதல் அளித்து 2024ல் முதல் செமிகண்டக்டர் ஆலையை நிறுவியது. மேலும் பல ஆலைகளுக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது. தற்போது 10 செமிகண்டக்டர் திட்டங்கள் நடந்து வருகின்றன. 18 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது.

இனி செமிகண்டக்டர் துறையில் இந்தியா அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறி வருகிறது. இதற்காக வடிவமைப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டத்தை மறுசீரமைத்து வருகிறோம். எனவே இந்தியாவில் தயாரிக்கப்படும் மிகச்சிறிய சிப் உலகின் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் நாள் வெகு தொலைவில் இல்லை. இது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிப் என உலகம் சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றார்.

முதல் காலாண்டில் 7.8 சதவீத வளர்ச்சி

இந்திய பொருளாதாரம் குறித்து பேசிய பிரதமர் மோடி, ‘‘ஏப்ரல்-ஜூன் வரையிலான முதல் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி அனைத்து எதிர்பார்ப்பு, நம்பிக்கை, மதிப்பீட்டை விட மிஞ்சி உள்ளது. உலகளாவிய நிச்சயமற்ற தன்மை மற்றும் பொருளாதார சுயநலத்தால் உருவாக்கப்பட்ட சவால்களுக்கு மத்தியிலும் இந்தியா 7.8 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் அனைத்து துறையிலும் இந்தியா உற்சாகத்துடன் காணப்படுகிறது’’ என்றார். இந்தியாவை செத்த பொருளாதாரம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்த நிலையில் பிரதமர் மோடி இவ்வாறு பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News