செல்வப்பெருந்தகை பேட்டி எடப்பாடி பழனிசாமி ஏமாந்து விட்டார்
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி: பாஜ எந்த மாநிலத்தில், மாநில கட்சியுடன் கூட்டணி வைத்தாலும், அந்த மாநிலத்தில் உள்ள மாநில கட்சியை விழுங்க தொடங்கும். அதற்கு முன் உதாரணங்களாக பீகார், மகாராஷ்டிரா மாநிலங்கள் உள்ளன. மகாராஷ்டிராவில் பால் தாக்கரே மகன் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக இருந்தார். அந்த கட்சியை பாஜ உடைத்து, கட்சியை விழுங்கி, வேறு கட்சியிலிருந்து ஏக்நாத் சிண்டேவை முதலமைச்சர் ஆக்கியது.
அதன் பின்பு அவரையும் கவிழ்த்து விட்டு, பாஜவை சேர்ந்தவரை முதலமைச்சர் ஆகியது. இதுதான் ஆர்எஸ்எஸ் சித்தாந்தம், பாஜவின் சித்து விளையாட்டு. எடப்பாடி பழனிசாமி பாஜவிடம் ஏமாந்து போய்விட்டார். அன்வர் ராஜா விழித்துக் கொண்டு விட்டார். தமிழ் சமுதாயத்தை காப்பாற்றுவதற்காக, தன்னை திமுகவுடன் இணைத்துக் கொண்டார். அவருடைய முடிவு, நல்ல முடிவு. இவ்வாறு அவர் கூறினார்.