புலிக்கு பிறந்தது பூனையாகுமா? அதிரடி காட்டும் சேவாக் மகன்
டெல்லி: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களில் முக்கியமானவர் அதிரடி ஆட்டக்காரர் சேவாக். இவரின் ஆட்டத்தை எந்தவொரு இந்திய ரசிகராலும் மறக்கவே முடியாது. ஸ்பின்னர்களை நடந்து வந்து எளிதாக அட்டாக் செய்வதில் சேவாக்கிற்கு நிகர் சேவாக் மட்டும்தான். இந்நிலையில் சேவாக் தனது இரு வாரிசுகளையும் கிரிக்கெட் களத்திற்குள் இறக்கி விட்டுள்ளார். இருவரும் டெல்லி பிரீமியர் லீக் தொடரில் 2 அணிகளால் வாங்கப்பட்டுள்ளனர்.
இதில் மூத்த மகன் ஆர்யாவீர் மத்திய டெல்லி கிங்ஸ் அணிக்காகவும், இளைய மகன் வேதாந்த் வடக்கு டெல்லி லயன்ஸ் அணிக்காகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். போட்டியின்போது ஆர்யாவீர், நவ்தீப் சைனி பவுலிங்கில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை அடித்தார். அந்த இரு பவுண்டரி களையும் டவுன் தி டிராக் நடந்து வந்து சிறிதும் அச்சப்பட்டாமல் அடித்த ஆர்யா வீரின் ஆட்டம் தந்தை சேவாக்கை நினைவுபடுத்தியது.