சென்னை: போலீசாரை தாக்கிய விவகாரத்தில் கைதான சீமான் வீட்டு காவலாளி சிறையில் அடைக்கப்பட்டார். நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் காவல் ஆய்வாளர் மீதான தாக்குதல் மற்றும் சம்மனை கிழித்த விவகாரத்தில் பாதுகாவலர் அமல்ராஜ் மற்றும் ஓட்டுநர் சுபாகருக்கு சோழிங்கநல்லூர் குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி கார்த்திகேயன் மார்ச் 13 வரை நீதிமன்றக் காவல் விதித்தார். மார்ச் 13 வரை காவலில் வைக்க சோழிங்கநல்லூர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து அமல்ராஜ் சிறையில் அடைக்கப்பட்டனர்.