2021-22 முதல் 2025-26 வரையிலான துறை சார்ந்த திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அமைச்சர் காந்தி தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம்..!!
Advertisement
இக்கூட்டத்தில், ஏற்கனவே ஆணை வெளியிடப்பட்டு முழுமையாக முடிக்கப்பட்ட பணிகள். வெளியிடப்பட்ட ஆணைகளின் மீது தொடர் நடவடிக்கை, ஆணைகள் வெளியிடப்பட வேண்டிய அறிவிப்புகள் ஆகியவற்றின் மீது ஒவ்வொரு அறிவிப்புகள் மீதும் தனித்தனியே ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், நிலுவையில் உள்ள அறிவிப்புகள் மீது விரைவில் ஆணைகள் வெளியிட துரித நடவடிக்கை மேற்கொள்ள அமைச்சரால் அறிவுறுத்தப்பட்டது. இக்கலந்தாய்வு கூட்டத்தில், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை அரசு செயலாளர். வே.அமுதவல்லி, இ.ஆ.ப., கைத்தறி துறை இயக்குநர், மகேஸ்வரி ரவிக்குமார், இ.ஆ.ப., மற்றும் துணிநூல் துறை இயக்குநர் இரா.லலிதா. இ.ஆ.ப., மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Advertisement