சாரண, சாரணியர் பயிற்சி பெற்றவர்களுக்கு ரயில்வேயில் வேலை
பணி: கிளார்க் கம் டைப்பிஸ்ட் (ஸ்கவுட்ஸ் மற்றும் கைய்ட்ஸ் கோட்டா ரெக்ரூட்மென்ட்-2025-26): 13 இடங்கள்.
சம்பளம்: 7வது ஊதியக் குழு விதிமுறைப்படி வழங்கப்படும்.
வயது வரம்பு: 01.01.2026 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டி யினருக்கு 5 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: 10ம் வகுப்பு அல்லது ஐடிஐ அல்லது பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஸ்கவுட்ஸ் மற்றும் கைய்ட்ஸ் தகுதி: மேற்குறிப்பிட்ட கல்வித்தகுதியுடன் ஸ்கவுட்ஸ் மற்றும் கைய்ட்ஸ் அமைப்பில் குறைந்தது 5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்து பயிற்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தேசிய அளவில், மாநில அளவில் நடைபெற்ற 2 சாரண, சாரணியர் நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் ஸ்கவுட்ஸ் மற்றும் கைய்ட்ஸ் அமைப்பில் விண்ணப்பதாரரின் அனுபவம், சாதனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.பணியில் சேர்ந்த 2 ஆண்டுகளுக்குள் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் என்ற வேகத்தில் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
கட்டணம்: பொது மற்றும் ஓபிசியினருக்கு ரூ.500/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/ பெண்கள்/ திருநங்கைகள்/சிறுபான்மையினருக்கு ரூ.250/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.www.rrcer.org என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.08.2025.