அறிவியல் என்பது கட்டுக் கதை அல்ல: பாஜக எம்.பி அனுராக் தாக்கூர் பேச்சுக்கு கனிமொழி எம்.பி கண்டனம்
சென்னை: அறிவியல் என்பது கட்டுக் கதை அல்ல என பாஜக எம்.பி அனுராக் தாக்கூர் பேச்சுக்கு கனிமொழி எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார். இமாச்சலப் பிரதேசத்தில் பிஎம்ஸ்ரீ பள்ளியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் கலந்துக் கொண்டார். பின்னர், நிகழ்ச்சியில் பேசியவர் விண்வெளியில் பயணம் செய்த முதல் நபர் யார் என்று மாணவர்களிடையே கேள்வி ஒன்றை எழுப்பினார். அதற்கு மாணவர்கள் நீல் ஆர்ம்ஸ்ட்ராங் என்று சத்தமாக பதில் அளித்தனர். அந்த பதிலை கேட்ட பாஜக எம்பி அனுராதாக்கூர் சிரித்துள்ளார்.
மேலும் முதன் முதலில் விண்வெளிக்கு சென்றது அனுமன் தான் நீல் ஆம்ஸ்ட்ராங் இல்லை என்று கூறியுள்ளார். மேலும், விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் சோவியத் விண்வெளி வீரர் யூரி ககாரின் ஆவார், அவர் 1961ல் பூமியைச் சுற்றி வந்தார் . 1969ல் அமெரிக்காவைச் சேர்ந்த ஆம்ஸ்ட்ராங், சந்திரனில் நடந்த முதல் மனிதர் ஆனார். ஆனால் இங்கே இரண்டு தவறுகள் இருந்தன. மாணவர்களுக்கு சரியான பதில் தெரியாது என்று கூறினார். மேலும் நமது பாரம்பரியம் அறிவு கலாச்சாரத்தை பாட புத்தகங்களுக்கு அப்பால் தேட வேண்டும் என்று கூறினார். நாம் இன்னும் நிகழ்காலத்தில் நம்மைப் பார்க்கிறோம்.
நமது ஆயிரக்கணக்கான ஆண்டுகால பாரம்பரியம், அறிவு, கலாச்சாரம் ஆகியவற்றை நாம் அறியாத வரை, ஆங்கிலேயர்கள் நமக்குக் காட்டியது போலவே நாம் இருக்கிறோம். நீங்கள் உலகத்திற்கு அப்பால் இருந்து பார்த்தால், நீங்கள் பார்க்க நிறைய விஷயங்களைக் காண்பீர்கள் என்று அனுராக் தாக்கூர் மாணவர்களை வலியுறுத்தினார். இந்நிலையில், பாஜக எம்.பி அனுராக் தாக்கூர் பேச்சுக்கு கனிமொழி எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ள கண்டனத்தில்; நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அனுராக் தாக்கூர், பள்ளி மாணவர்களிடம் நிலவில் முதன்முதலில் கால் வைத்தது நீல் ஆம்ஸ்ட்ராங் அல்ல, அனுமன் என்று கூறுவது மிகவும் கவலையளிக்கிறது. அறிவியல் என்பது கட்டுக்கதை அல்ல. வகுப்பறைகளில் இளம் மனங்களை தவறாக வழிநடத்துவது நமது அரசியலமைப்பில் பொதிந்துள்ள அறிவு, பகுத்தறிவு மற்றும் அறிவியல் மனப்பான்மையை அவமதிப்பதாகும். இந்தியாவின் எதிர்காலம், உண்மையை கட்டுக்கதையுடன் குழப்பிக் கொள்ளாமல், ஆர்வத்தை வளர்ப்பதில்தான் உள்ளது. என்று கூறியுள்ளார்.