சென்னை பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் கல்விச்சுற்றுலாவினை கொடியசைத்து தொடங்கி வைத்தார் மேயர் பிரியா
சென்னை: மேயரின் நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி சென்னை பள்ளிகளில் 10ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று, தொடர்ந்து சென்னை பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயிலும் 60 மாணவர்களின் கல்விச்சுற்றுலாவினை மேயர் ஆர். பிரியா இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மேயரின் நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, சென்னை பள்ளிகளில் 10ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று, தொடர்ந்து சென்னை மேல்நிலைப்பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயிலும் 60 மாணவர்களின் கல்விச்சுற்றுலாவினை மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் இன்று (19.08.2025) ரிப்பன் கட்டட வளாகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 10ஆம் வகுப்பு மாணவர்களில் அரசுப் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று, சென்னை பள்ளிகளிலேயே தொடர்ந்து 11ஆம் வகுப்பு மேல்நிலைக்கல்வியை தொடரும் 50 மாணவர்களை கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு மகேந்திர கிரி, விண்வெளி ஆராய்ச்சி மையம் மற்றும் கூடங்குளம் அனல் மின் நிலையம் போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, இந்த கல்வியாண்டில் சென்னை பள்ளிகளில் 81 சென்னை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 10ஆம் வகுப்பு பயின்று அரசு பொதுத் தேர்வில் வெற்றி பெற்று, சென்னை பள்ளிகளிலேயே தொடர்ந்து 11ஆம் வகுப்பு தொடரும் மாணவர்களில் மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் 60 மாணவர்களை தேர்வு செய்து, 10 ஆசிரியர்களுடன் முதற்கட்டமாக ஆந்திரபிரதேசத்தில் உள்ள விண்வெளி ஆராயச்சி மையம் மற்றும் ராக்கெட் செலுத்தும் மையமான ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (ISRO), தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் (TTDC) குளிர்சாதனப் பேருந்துகள் மூலம் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
இந்த சுற்றுலா மூலம் மாணவர்களின் அறிவுத்திறன், ஆராய்ச்சித் திறன் மற்றும் கற்றல் திறன் அதிகரிக்கும். மேலும், 10ஆம் வகுப்பில் பயின்று 11ஆம் வகுப்பு சென்னை பள்ளிகளிலேயே பயில வேண்டும் என்ற ஆர்வமும் உருவாகும்.
இந்நிகழ்வில் துணை ஆணையர் (வருவாய் (ம) நிதி) பிரதிவிராஜ், நிலைக்குழுத் தலைவர் (கல்வி) பாலவாக்கம் த. விஸ்வநாதன் மற்றும் கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.