கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு
சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் பள்ளி, கல்லூரிகள் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டிட்வா புயலின் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அதிகாலை முதல் மிதமான முதல் கன மழை பெய்து வருகிறது. தொடர்ந்து புயல் சின்னம் அடுத்த 2 நாள்களுக்கு சென்னை கடற்கரை அருகே நிலைகொண்டிருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், வரும் டிச. 3 ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்தது.
Advertisement
இதனிடையே சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழை பெய்வதற்கான சிவப்பு நிற எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்தது. இந்நிலையில் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்ததந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டனர்.
Advertisement