பள்ளிக் கல்வி, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை: சென்னை மாவட்ட கலெக்டர் தகவல்
மாவட்ட கட்டுப்பாட்டு அறை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக 6வது தளத்தில் அனைத்து அரசு வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிவரை செயல்படும். மாவட்ட கட்டுப்பாட்டு அறையின் வழியாக ஆலோசனை தேவைப்படும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படும். 11 ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு பாலிடெக்னிக், ஐடிஐ போன்ற தொழில் சார்ந்த படிப்புகளில் சேர்த்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உயர் கல்வி சார்ந்த உதவிகள், ஆலோசனைகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரி , பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ காலிப்பணியிடங்கள் சார்ந்த விவரங்கள் என, அனைத்து தகவல்களும் உயர்கல்வி கட்டுப்பாட்டு அறை வாயிலாக வழங்கப்படும். மேலும் சென்னை மாவட்டத்தில் உள்ள
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் சேர்க்கை மேற்கொள்ள தேவையான உதவிகள் செய்யப்படும். மேலும், விவரங்களுக்கு 044 25268320 எக்ஸ்டென்சன் 604, 9894468325 (கட்டுப்பாட்டு அறை தொடர்பு எண்) எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.