ஸ்கூல் பிளானர் செயலி
விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப் போகிறது. திடீரென சீக்கிரமாக எழுதல், காலை உணவு, மதிய உணவு தயாரித்தல், கால அட்ட வணைகள் பின்பற்றுதல், பள்ளி அசைன்மென்ட், என குழந்தைகள் மட்டுமின்றி பெற்றோர்களும் ஒரு குழப்பமான மனநிலையில் இருப்பர். உங்களுக்கு உதவும் டிஜிட்டல் உதவியாளர் தான் ஸ்கூல் பிளானர் செயலி (school planner). இன்று என்னென்ன வகுப்புகள், அதற்கு தேவையானவை என்ன, பரீட்சை ஏதும் இருந்தால் அதற்கு நினைவூட்டல் மற்றும் பாட ஆலோசனைகள், புராஜெக்ட் ஐடியாக்கள் என அனைத்தும் இந்த செயலி கொடுக்கும். இதனைக் கொண்டு பெற்றோர்களும் தினந்தோறுமான குழந்தைகளின் படிப்பு குறித்த செயல்களையும் தொடர்ந்து கவனித்து ஆவண செய்யலாம்.