பள்ளி மாணவர்களுக்கான இன்ஸ்பையர் விருது
இதில், 6 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தங்கள் புதுமையான அறிவியல் படைப்புகளைச் சமர்ப்பிப்பதன் மூலம் தேர்வு செய்யப்படுவர். ஒவ்வொரு கல்வியாண்டிலும் மாணவர்களின் சிறந்த அறிவியல் படைப்புகள் அந்தந்த மாவட்டம் வாயிலாகத் தேர்வு செய்யப்பட்டு மத்திய அமைச்சகத்துக்கு சமர்ப்பிக்கப்படும். அதன்படி 2024-2025 கல்வி ஆண்டுக்கான இன்ஸ்பையர் விருதுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்மூலம் ஆக்கப்பூர்வமானயோசனைகளைக் கொண்ட ஒரு லட்சம் மாணவர்களுக்கு தலா ரூ. 10,000 வழங்கப்படும்.
படைப்பாற்றல் மற்றும் கலாசாரத்தை வளர்ப்பதற்கு அறிவியல் மற்றும் சமூகப் பயன்பாடுகளில் வேரூன்றிய ஒரு மில்லியன் அசல் யோசனைகள்/புதுமைகளை இலக்காக வைத்து பள்ளி மாணவர்களிடையே புதுமையான சிந்தனையை வளர்ப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்தத் திட்டத்தின் கீழ் செப்டம்பர் 15, 2024 வரை https://www.inspireawards-dst.gov.in என்ற இணையதளத்தின் மூலம் மாணவர்களின் 5 சிறந்த அசல் யோசனைகள்/புதுமைகளைப் பள்ளிகள் பரிந்துரைக்கலாம்.