தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 65 புதிய கண்டுபிடிப்புகளுக்கு ரூ.40.50 லட்சம் பரிசுத்தொகை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்

சென்னை: தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் சார்பில் நேற்று அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் புத்தாக்க கண்டுபிடிப்பு கண்காட்சியை தொடங்கி வைத்து, மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
Advertisement

பின்னர் அவர் பேசியதாவது:

தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்க நிறுவனம், மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு தொழில் முனைவு பயிற்சியுடன் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தும் விதமாக நிதி உதவிகளை அளித்து வருகிறது. இந்த விழாவில், புத்தாக்கபற்று சீட்டுதிட்டத்தின் கீழ் 15 புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கும், பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 50 மாணவ குழுக்கள் என மொத்தம் 65 புதிய கண்டுபிடிப்புககளுக்கு ரூ.40 லட்சத்து 50 ஆயிரம் உதவி தொகையும், பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் நம் மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளான ரோபோ ரோடு ரோலர், பல்நோக்கு விவசாய கருவி, கப்பல் ஊழியர்களுக்கான பாதுகாப்பு பெல்ட், சவுண்ட் கன், அன்னாச்சி பழம் அறுவடை கருவி, மக்கும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் என பல்வேறு கண்டுபிடிப்புகள் இடம் பெற்றுள்ளது. உலக நாடுகளுடன் நாம் போட்டி போடுவதற்கு புதிய கண்டுப்பிடிப்புகள் அவசியம்.

ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்புக்காக வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை நடப்பாண்டு முதல் ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாகவும், அவற்றை தயாரித்து - சந்தைப்படுத்த வழங்கப்படும் உதவித்தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் இத்திட்டத்தின் கீழ், 470 புதிய கண்டுப்பிடிப்பாளர்களுக்கு ரூ.12 கோடியே 10 லட்சம் உதவி தொகையாக வழங்கப்பட்டுள்ளது. பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாணவ குழுக்களின் சிறந்த புதிய கண்டுபிடிப்புகளுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை ரொக்க பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

Related News