தமிழ்நாட்டில் 34 பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் 34 அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த அறிவிப்பை பள்ளி கல்வித்துறை வெளியிட்டு உள்ளது. அதன்படி, 2025-2026ம் கல்வி ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு கல்வி தகவல் மேலாண்மை அமைப்பு (எமிஸ்) இணையதளம் வாயிலாக நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் அரசு பள்ளி ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் 34 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை தலைமை ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களும் நிரம்பியுள்ளன. 25 மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றத்தால் ஏற்பட்ட காலி இடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.