பள்ளிக்கல்வித்துறை சார்பில் முப்பெரும் விழா: 59 பள்ளி கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: பள்ளிக்கல்வித்துறை சார்பில் தொடங்கியுள்ள முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டுள்ளார். 59 பள்ளி கட்டிடங்களை நேரத்தில் வைத்திருக்கிறார். இந்த விழா நேரு அரங்கில் நடைபெற்றது. ஆசிரியர் தேர்வு வாரியதின் மூலம் தேர்வு செய்யப்பட்டிருக்கக்கூடிய 2715 புதிய ஆசிரியர்களுக்கான நுழைவு நிலை, பயிற்சினை தொடங்கி வைத்தார்.
மேலும் ரூ.277 கோடி மதிப்பிட்டில் பாரத சாரணியர் தலைமை அலுவலர் கட்டிடத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதோடு மட்டுமல்லாமல் 243 புதிய பள்ளி, கல்லூரி கட்டடங்களுக்கு அடிகள் நாட்டியதோடு, 95 கோடி கட்டப்பட்டிருக்கக்கூடிய 59 பள்ளி கட்டிடங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து 2,457 இடைநிலை, ஆசிரியர்கள் 2,710 ஆசிரியர்கள் மேலும் 3,043 முதுகலை ஆசிரியர் ஆகியோர்களுக்கு பணிநியமனம் அணைகளை வழங்கி அரசு பள்ளி ஆசிரியர்களும் மிக முக்கியமான ஒரு பாதுகாவலர் போல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளங்கி கொண்டிருக்கிறார். இந்த நிலையில், தான் அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்ல ஆசியர்களுக்கும் பயனளிக்கக்கூடிய பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக முழுவதும் ஏராளமான பள்ளி மாணவர்கள், சாரண, சாரணியர் இயக்கத்தினர் , துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி உட்பட உயர் அதிகாரிகளும் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த பள்ளி மாணவ மற்றும் ஆசிரியர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்று கொண்டனர்.