தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சவுதி சூப்பர் கோப்பை கால்பந்து அல் நஸரை வீழ்த்தி அல் அஹ்லி சாம்பியன்

ஹாங்காங்: சவுதி சூப்பர் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான அல் நஸர் அணியை, அல் அஹ்லி சவுதி அணி வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. சவுதி சூப்பர் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி, ஹாங்காங்கில் நடந்தது. அதில், போர்ச்சுகலை சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான அல் நஸர் அணியும், அல் அஹ்லி சவுதி அணியும் மோதின.

Advertisement

இப்போட்டியின் 41வது நிமிடத்தில் ரொனால்டோ, பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி அற்புதமாக கோலடித்தார். பின் அல் அஹ்லி வீரர் பிரான்க் கெஸ்ஸி 45 6வது நிமிடத்திலும், அல் நஸர் வீரர் மார்செலோ புரோஸோவிக் 82வது நிமிடத்திலும், அல் அஹ்லி வீரர் ரோஜர் இபானெஸ் 89வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். போட்டியின் முடிவில் இரு அணிகளும் தலா 2 கோல்களுடன் சமநிலையில் இருந்தன. அதையடுத்து வெற்றியை தீர்மானிக்க நடந்த பெனால்டி ஷூட் அவுட்டில் 5-3 என்ற கோல் கணக்கில் அல் அஹ்லி வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

* அல் நஸர் அணிக்காக ரொனால்டோ 100 கோல்

சவுதி சூப்பர் கப் கால்பந்து இறுதிப் போட்டியில் ரொனால்டோ, அல் நஸர் அணிக்காக 100வது கோலடித்து சாதனை படைத்தார். தவிர, 4 வெவ்வேறு அணிக்காகவும், ஒரு நாட்டுக்காகவும் 100 கோலடித்த ஒரே வீரர் என்ற வரலாற்று சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார். ரொனால்டோ, ரியல் மாட்ரிட் அணிக்காக 450, மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக 145, ஜுவன்டஸ் அணிக்காக 101, அல் நஸர் அணிக்காக 100 கோல்கள் போட்டுள்ளார். தவிர, அவரது சொந்த நாடான போர்ச்சுகல் அணிக்காகவும் 138 கோல்களை ரொனால்டோ அடித்துள்ளார்.

Advertisement