தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சனிக்கிழமை பிரசாரம் ஏன்? நாகையில் விஜய் புது விளக்கம்

நாகப்பட்டினம்: சனிக்கிழமை தோறும் சுற்றுப்பயணம் ஏன் என்பதற்கு விஜய் புது விளக்கத்தை நாகையில் நேற்று தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் தவெக தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் சனிக்கிழமை தோறும் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். அதன்படி, கடந்த சனிக்கிழமை திருச்சி, அரியலூரில் பிரசாரம் செய்தார். இந்த நிலையில் 2வது சனிக்கிழமையான நேற்று (20ம்தேதி) நாகப்பட்டினம், திருவாரூரில் பிரசாரம் மேற்கொண்டார். நாகப்பட்டினம் புத்தூர் அண்ணாசிலை அருகே விஜய் பிரசாரம் செய்தார்.

Advertisement

அப்போது அவர் பேசியதாவது: தமிழ்நாட்டுல மீன் ஏற்றுமதியில இரண்டாவது இடத்தில் இருப்பது நம்ம நாகப்பட்டினம். ஆனால் நவீன வசதிகளோட மீன் பதப்படுத்தற மார்டன் தொழிற்சாலைகள் இல்ல. இலங்கை கடற்படையால் நம்ம மீனவர்கள் தாக்கப்படுறதையும், அதுக்கான காரணத்தைப் பற்றியும் அதுக்கான தீர்வை பற்றியும் நான் மதுரை மாநாட்டுலயே பேசியிருந்தேன். அது ஒரு தப்பா. மீனவர்களுக்காக குரல் கொடுப்பதும், அவர்களுக்காக நிற்பதும் நம்முடைய உரிமை. நம்மளுடைய கடமை.

நம்ம தொப்புள் கொடி உறவுகளான இலங்கை தமிழர்கள் உலகத்தில் எந்த மூலையில இருந்தாலும் தாய் பாசம் காட்டிய தலைவனை இழந்து தவிக்கிற அவங்களுக்காக குரல் கொடுப்பதும், அவங்களுக்காக நிற்பதும் நமது கடமை இல்லையா?, மீனவர்களின் உயிர் எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு இலங்கை தமிழர்களோட உயிரும், வாழ்வும் ரொம்ப ரொம்ப முக்கியம். மற்ற மீனவர்கள், இந்திய மீனவர்கள், நமது மீனவர்கள், தமிழக மீனவர்கள்.

இப்படி பிரிச்சு பார்த்து பேசுறதுக்கு நாம ஒன்னும் பாசிச பாஜ அரசு கிடையாது. நிரந்தரமான தீர்வு, நிரந்தரமாக இந்த பிரச்னையை சால்வ் பண்றதுதான் நம்மளுடைய ஒரு முக்கியமான ஒரு அஜெண்டா. இந்த டூர் பிளான் இந்த ஷெட்யூல் போட்டதுக்கு அப்புறம் அது என்னப்பா சனிக்கிழமை சனிக்கிழமை என விமர்சனம் வந்துள்ளது.

உங்க எல்லாரையும் வந்து பார்க்கும் போது உங்களுக்கு எந்த விதமான இடையூறும் இருந்துற கூடாது. முக்கியமாக உங்களுடைய வேலைகளுக்கு எந்த விதமான இடர்பாடுகளும் எழுந்து விடக் கூடாது. அப்படிங்கிற ஒரே காரணத்துக்காகத்தான் இப்படி வார இறுதி நாளில் பார்த்து இப்படி இந்த பிளானை பண்ணோம். ஓய்வு நாள்களில் வரணும்ங்கறதுதான் அந்த எண்ணமே. இவ்வாறு அவர் பேசினார்.

* ஆம்புலன்சில் தொண்டர்கள்

தவெக கொடியுடன் ஒரு ஆம்புலன்ஸ் புத்தூருக்கும், வாஞ்சுருக்கும் அடிக்கடி சென்றது. ஆம்புலன்ஸில் 5க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கோஷங்களை எழுப்பியவாறு அங்கும், இங்குமாக சென்று கொண்டிருந்தனர். ஆம்புலன்சை பார்த்த தொண்டர்களும், பொதுமக்களும் வழிவிட்டனர். ஆனால் ஆம்புலன்ஸ் முன்பகுதியில் தொண்டர்கள் அமர்ந்து இருந்தது அப்பகுதியினரை முகம் சுளிக்க செய்தது.

* அனுமதித்தது 30 நிமிடம் பேசியது வெறும் 10 நிமிடம்

நாகப்பட்டினம் புத்தூர் ரவுண்டானாவில் விஜய் பேசுவதற்கு காவல் துறை சார்பில் காலை 12.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை என 30 நிமிடங்கள் அனுமதி அளித்து இருந்தது. ஆனால் விஜய் நாகப்பட்டினம் மாவட்ட எல்லைக்கு 12.40 மணிக்கு தான் வந்தார். அதன் பின்னர் நாகப்பட்டினம் நகர எல்லைக்குள் 1 மணிக்கு வந்தார்.

அங்கிருந்து பிரசார வாகனம் மூலம் பிரசாரம் செய்யும் இடமான புத்தூர் ரவுண்டானாவிற்கு 1.30 மணிக்கு வந்து 1.33 மணிக்கு பிரசாரத்தை தொடங்கினார். 1.43 மணிக்கு பிரசாரத்தை முடித்து கொண்டு திருவாரூர் புறப்பட்டு சென்றார். இதனால் நீண்ட நேரம் பேசுவார் என எதிர்பார்த்து இருந்த தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

* நீதிமன்றம் கண்டனத்தால் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு

திருச்சியில் கடந்த வாரம் சனிக்கிழமை பிரசாரத்துக்காக விஜய் வந்த போது, அவரை பார்ப்பதற்காக ரசிகர்கள், தொண்டர்கள் விமானநிலையத்தில் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டுகள், தடுப்புகளை உடைத்து தாண்டி விஜய்யை பார்க்க சென்றனர். ஏர்போர்ட்- புதுக்கோட்டை சாலையில் போடப்பட்டிருந்த தடுப்புகளையும் உடைத்தனர்.

பொது சொத்துக்கள் சேதமடைந்தால் அதற்கான இழப்பீட்டு தொகையை வசூலிக்கும் விதமாக குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்யும் வகையில் விதிமுறைகளை வகுக்க வேண்டு்ம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தில் நேற்று தவெக தொண்டர்கள் , ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. நுழைவுவாயிலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். விஜய்யும் ரோடு ஷோ நடத்தாமல் கருப்பு காரில் ஏறி சென்றுவிட்டார்.

* உத்தரவை மீறிய ரசிகர்கள்

தனது வாகனத்தின் பின்னால் யாரும் அணிவகுத்து வர வேண்டாம் என விஜய் உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவை யாரும் பின்பற்றவில்லை. திருவாரூர் அடியக்கமங்கலத்தில் இருந்து ஏராளமான ரசிகர்கள் கார்கள், டூவீலர்களில் விஜய் வாகனத்தை பின்தொடர்ந்து வந்தனர்.

* அரசு அலுவலக கேட்டை உடைத்த ரசிகர்கள்

திருவாரூர் அரசு பொதுப்பணித்துறை அலுவலகத்தின் கேட் பூட்டப்படிருந்த நிலையில் பூட்டை உடைத்துக்கொண்டு அலுவலகத்திற்குள் நுழைந்த விஜய் ரசிகர்கள் கட்டிடத்தின் மேலே ஏறி நின்றிருந்தனர்.

* 4 பவுன் செயின் பறிப்பு

விஜய் பிரசாரம் செய்து கொண்டிருந்த போது தெற்கு பொய்கைநல்லூரை சேர்ந்த பெண் விஜய் பேசுவதை கேட்டு கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர் அந்த பெண் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் செயினை பறித்து அருகில் இருந்த மற்றொருவரிடம் கொடுத்தார்.

இதை பார்த்தவுடன் அந்த பெண் சத்தம் போடவே அருகில் இருந்த தொண்டர்கள் அந்த வாலிபரை சரமாரியாக தாக்கினர். அவர்களிடம் இருந்து தப்பிக்க அந்த வாலிபர் வலிப்பு நோய் வருவது போல் நடித்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்த பெண் தனது மகள் திருமணத்திற்காக 4 பவுன் செயினை வைத்திருந்ததாக கண்ணீர் மல்க கூறினார்

* கோயிலை மறைத்து விஜய் பேனர்

திருவாரூருக்கு நேற்று விஜய் வந்து தெற்கு வீதியில் பேசினார். அப்பொழுது விஜய்யை வரவேற்று அந்த இடத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலை மறைத்து கட்டவுட் வைக்கப்பட்டிருந்தது. இதனை கண்ட பக்தர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

* ஓட்டு போட மாட்டாங்கன்னு சொல்றாங்க அப்படியா?

திருவாரூர் தெற்கு வீதியில் நேற்று மாலை தவெக விஜய் பேசுகையில்,‘‘ நண்பா ஒரே ஒரு டவுட்டு எங்க போனாலும் இது வெறும் சும்மா கூட்டம், ஓட்டு போட மாட்டாங்கன்னு சொல்றாங்க, அப்படியா இதென்ன சும்மா கூட்டமா? என்று சந்தேகமாகக் கேட்டார்.

* கோயில் கோபுரத்தில் ஏறிய விஜய் ரசிகர்கள்

திருவாரூரில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் ஆலயம் உள்ளது. விஜய்யை பார்ப்பதற்கு தெற்கு வீதியில் திரண்ட தொண்டர்கள் அங்குள்ள காசி விஸ்வநாதர் கோயில் கோபுரத்தின் மீது ஏறினர். கோபுரத்தின் மீது ஏராளமான ரசிகர்கள் ஏறியதை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.

* இது சாட்டர்டே பார்ட்டி இல்ல... கிண்டலடித்து போஸ்டர்

நாகப்பட்டினத்தை தொடர்ந்து விஜய் திருவாரூரில் நேற்று மாலை பிரசாரம் செய்தார். விஜய் திருவாரூர் வருவதற்கு முன்னர் நகர் பகுதி முழுவதும் விஜய்யை நக்கலடிக்கும் விதமாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதில் ப்ரோ... பாலிடிக்ஸ் சாட்டர்டே பார்ட்டி இல்ல... அது 24/7 டியூட்டி, ப்ரோ...

இது பொலிட்டிகல் யாத்ராவா...இல்ல உங்க வீக்எண்ட் கேட் வேயா?... ப்ரோ பாலிடிக்ச ஏதோ வீக் எண்ட் மூவி ரிலீஸ்னு நினைக்கிறாரு...இப்படி வாசகங்கள் இருந்தன. இதனால் ஆத்திரமடைந்த தவெக தொண்டர்கள், அந்த போஸ்டர்களை ஆவேசமுடன் கிழித்தெறிந்தனர்.

* பாஜ- அதிமுக குறித்து நோ கமெண்ட்ஸ்

திருவாரூரில் நேற்று நடந்த பிரசாரத்தில் பாஜ மற்றும் அதிமுக குறித்து எதுவும் விஜய் பேசவில்லை. ஆரம்பத்தில் பாஜ குறித்து அதிகளவு விஜய் பேசி வந்தார். தொடர்ந்து, பாஜவுக்கு எதிரான கருத்துகளை விஜய் பேசவில்லை. நாகையில் பெயரளவுக்கு பாஜ குறித்து பேசினார். ஆனால், அதிமுக குறித்து பேசவில்லை. திருவாரூரில் அதிமுக- பாஜ குறித்து எவ்வித கருத்துகள் விஜய் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

* பெரம்பலூர் மக்களிடம் மன்னிப்பு

விஜய் பேசுகையில், இந்த நேரத்துல பெரம்பலூர் பகுதி மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன். கடந்த முறை உங்கள் பகுதிக்கு வர முடியலை. சீக்கிரமாவே உங்களை தேடி நான் வருவேன் என்றார்.

* டாஸ்மாக்கில் படையெடுத்த ரசிகர்கள்

காரைக்கால் வாஞ்சூர் ரவுண்டானா வழியாக விஜய் நாகப்பட்டினம் செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. எனவே, மாவட்ட எல்லையான வாஞ்சூர் ரவுண்டானா பகுதியில் விஜய்யை வரவேற்க ஏராளமான ரசிகர்களும் , தொண்டர்களும் காத்திருந்தனர். ஆனால் விஜய் அந்த வழியாக வராததால் அவர்கள் ஏமாற்றமடைந்தனர்.

இதனால் வாஞ்சூர் ரவுண்டானா பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏமாற்றமடைந்த விஜய் ரசிகர்கள், மனதை தேற்றிக்கொள்ள நாகப்பட்டினம் -காரைக்கால் மாவட்டத்தின் எல்லையில் உள்ள வாஞ்சூரில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு படை எடுத்தனர். இதனால் மதுபான கடை மற்றும் பார்களில் கூட்டம் அலைமோதியது.

* ஆபத்தான நிலையில் நின்றிருந்த குழந்தைகள்

திருவாரூரில் நேற்று விஜய்யை பார்ப்பதற்காக வந்திருந்த பலர் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்திருந்தனர். அந்த குழந்தைகளை ஆபத்தை உணராமல் கட்டிடங்களின் மொட்டை மாடியில் கட்டை சுவர்களின் விளிம்பில் நிறுத்தியிருந்தனர். தவறி விழுந்தால் உயிருக்கே உலையாய் முடியும் என்பதை உணராமல் குழந்தைகளை நிறுத்தியிருந்தது பதைபதைப்பை ஏற்படுத்தியது.

* மயங்கி விழுந்த பெண் தொண்டர்

நாகப்பட்டினம் புத்தூர் ரவுண்டானா அருகே விஜய்யை பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்களும், தொண்டர்களும் கூடியிருந்தனர். அப்போது அங்கே நின்றிருந்த பெண் ரசிகர் ஒருவர், திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை தூக்கி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

* மின் தடை கேட்டு நிர்வாகி மனு மின் தடை செய்வதாக விஜய் புலம்பல்

நாகப்பட்டினம் மாவட்ட தவெகசெயலாளர் சுகுமார் மின்வாரியத்திற்கு கடந்த 16ம்தேதி அனுப்பிய மனுவில், விஜய் பிரசாரம் தொடங்கி முடியும் வரை வழித்தடங்களில் மின் நிறுத்தம் செய்ய வேண்டும் என கோரியிருந்தார். இந்த நிலையில் நேற்று நாகையில் விஜய் பேசுகையில், தான் செல்லும் இடங்களில் மின்தடை ஏற்படுத்துவதாக என பேசினார். விஜய் வரும் போது மின் தடை ஏற்படுத்த வேண்டும் என அக்கட்சி நிர்வாகி மனு அளித்தது கூட தெரியாமல், விஜய் மின் தடை ஏற்படுவதாக புலம்புகிறாரே என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்.

* வேளாங்கண்ணி சர்ச் கட்டிட சுவர் இடிந்தது

விஜய் பிரச்சாரம் செய்யும் இடம் அருகே வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலயத்திற்கு சொந்தமான திருமண மண்டபம் உள்ளது. விஜய் பிரசாரம் முடிந்து புறப்பட்டவுடன் அங்கிருந்த தொண்டர்கள் புறப்பட தொடங்கினர். அப்போது பேராலயத்திற்கு சொந்தமான மண்டபத்தின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. அருகே வைத்திருந்த விஜய் வரவேற்பு பேனர்கள் சாய்ந்தது. பிரசாரத்தின் போது சுவர் சரிந்து இருந்தால் மிகப்பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும்.

Advertisement

Related News