சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: அப்ரூவராக மாறி உண்மையை சொல்கிறேன் என்று காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மனு
07:01 PM Jul 22, 2025 IST
Share
தூத்துக்குடி: சாத்தான்குளம் வழக்கில் அப்ரூவராக மாறி உண்மையை சொல்கிறேன் என்று சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் முதல் எதிரியாக ஆய்வாளர் ஸ்ரீதர் சேர்க்கப்பட்டுள்ளார். ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.எஸ்.ஐ. ரகு கணேஷ் உள்பட 9 பேர் மீது ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.