கார்த்தி நடிக்கும் சர்தார்-2 படிப்பிடிப்பு சண்டை காட்சியின்போது தவறிவிழுந்த பயிற்சியாளர் பலி: வடபழனி ஸ்டூடியோவில் பரபரப்பு
Advertisement
அப்போது பயிற்சியாளர் ஏழுமலை 20 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு மார்பு பகுதியில் பலத்த அடிபட்டு மயங்கினார். உடனே அருகில் இருந்தவர்கள் ஏழுமலையை மீட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த ஏழுமலை, நுரையீரலில் ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாக சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். இதுகுறித்து விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், திரைப்பட சண்டை காட்சியின் போது, எந்த பாதுகாப்பு உபகரணமும் ஏழுமலை அணியாமல் இருந்தது தெரியவந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement