தண்டேவாடா: சட்டீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் நேற்று மொத்தம் 12 நக்சல்கள் போலீசில் சரண் அடைந்தனர். இவர்களில் 9 நக்சல்களின் தலைக்கு போலீசார் மொத்தம் ரூ.28.50லட்சம் சன்மானம் அறிவித்து இருந்தனர். சரண் அடைந்த 12 பேரில் இரண்டு பெண் நக்சல்களும் அடங்குவர். அரசின் நக்சல்களின் புதிய சரண் அடைதல் கொள்கை, மறுவாழ்வு நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டு சரண் அடைந்துள்ளதாக நக்சல்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை தலைக்கு சன்மானம் அறிவிக்கப்பட்டு இருந்த 249 பேர் உட்பட மொத்தம் 1005 நக்சல்கள் சரண் அடைந்துள்ளனர்.