தூய்மை பணியாளர்களிடம் ‘ஓசி பஸ் பின்னால் வருது’ என்ற டிரைவர், கண்டக்டர் சஸ்பெண்ட்
Advertisement
கோவை: கோவை காந்திபுரத்தில் இருந்து துடியலூர், வெள்ளக்கிணறு, சரவணம்பட்டி வழித்தடத்தில் 111 என்ற அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் வெள்ளக்கிணறில் இருந்து துடியலூர் வந்த பஸ்சில் 3 பெண் தூய்மை பணியாளர்கள் ஏறினர். அப்போது, அவர்களிடம் டிரைவர் ஓசி பஸ் பின்னால் வருது, அதுல போய் ஏறுங்க என கூறியுள்ளார்.
இதனால், கோபம் அடைந்த பெண் தூய்மை பணியாளர்கள் டிரைவர், கண்டக்டரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, டிரைவருக்கு ஆதரவாக கண்டக்டர் பேசியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் அந்த டிரைவர், கண்டக்டரை 2 நாட்கள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர்.
Advertisement