தூய்மை பணியாளர் போராட்டம் - இதுவரை 6 வழக்குகள் பதிவு
09:35 PM Aug 14, 2025 IST
சென்னை: தூய்மை பணியாளர்கள் போராட்டம் தொடர்பாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை போலீஸ் தெரிவித்துள்ளது. நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் நடத்திய வழக்கறிஞர் பாரதி உள்பட 800 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாநகர பேருந்துகளை சேதப்படுத்தியதாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.