தூய்மைப் பணியாளர்களின் மாண்பினை திராவிட மாடல் அரசு ஒருபோதும் விட்டுக் கொடுக்காது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு
சென்னை: தூய்மைப் பணியாளர்களின் மாண்பினை திராவிட மாடல் அரசு ஒருபோதும் விட்டுக் கொடுக்காது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். நாளும் நம் நகரங்கள் இயங்க நள்ளிரவு, புயல், மழை, வெள்ளம் என எந்நேரமும் ஓயாமல் உழைப்பவர்கள் தூய்மைப் பணியாளர்கள். தூய்மைப் பணியாளர்களுக்காக 4 ஆண்டுகளில் நிறைவேற்றியுள்ள திட்டங்களை பட்டியலிட்டு முதலமைச்சர் பதிவிட்டார். என்றும் உங்களுடன் உங்களுக்காக நிற்கும் எளியோரின் அரசு என எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். தூய்மைப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளையும் பரிசீலித்து உள்ளோம். தூய்மைப் பணியாளர் களுக்காக புதிய நலத் திட்டங்களையும் செயல்படுத்த உள்ளோம் என்று தெரிவித்தார்.