வேதாரண்யம் ஒன்றிய அலுவலகத்தில் 1,000 மணல் மூட்டைகள், உபகரணங்கள் தயார்
*வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னேற்பாடு
வேதாரண்யம் : வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக 1000 ஆயிரம் மணல் மூட்டைகள், உபகரணங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக வட்டார வளர்ச்சி அலுவலர் சிங்காரவேலு தெரிவித்தார்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளவும், மழை காலங்களில் சாலை ஓரம், நீர் நிலைகளில் உடைப்புகளை சரி செய்யவும் மணல் மூட்டைகள் பயன்படுத்தப்படுகிறது.
இந்த மணல் மூட்டைகளை தயாரிக்கும் பணி கடந்த சில நாட்களாக நடை பெற்று வந்தது. ஆயிரம் மணல் மூட்டைகள் முதற்கட்டமாக வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஆயிரம் மணல் மூட்டைகளும், தயாரிக்கப்பட்டு தற்போது தயார் நிலையில் உள்ளது.
இவை அனைத்தும் வடகிழக்கு பருவமழையின் போது சாலைகளை அடித்து செல்லாமல் இருக்க சவுக்கு கம்புகள் நட்டு மணல் மூட்டைகளை அடுக்கவும், அதேபோல மண்வெட்டி, மரம் அறுக்கும் கருவி, டிராக்டர், பொக்லைன் எந்திரங்களும் மற்றும் மழை நீர் தேங்கிய பகுதிகளில் கொசு மருந்து அடிக்க இயந்திரங்களும் மீட்பு பணிக்காக தயார் நிலையில் உள்ளது.
இந்த நிலையில் வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கும் பகுதிகளை தேர்வு செய்து அங்கு மணல் மூட்டைகள் அனுப்பி வைக்கப்படும் என வேதாரண்யம் வட்டார வளர்ச்சி அலுவலர் சிங்காரவேலு தெரிவித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி மேலாளர் மகேஷ் உடன் இருந்தனர்.