என் செருப்பு சைஸ் 41: விஜய் ரசிகருக்கு குஷ்பு பதிலடி
சென்னை: ரஜினிகாந்தின் 173வது படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பாக நடிகர் கமல்ஹாசன் தயாரித்து சுந்தர்.சி இயக்குவதாக இருந்தது. ஆனால் சில நாட்களுக்கு முன்பு திடீரென சுந்தர்.சி அப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். சுந்தர்.சியின் விலகல் குறித்து பல தகவல்கள் பரவி வருகிறது. இதனால் சோசியல் மீடியாவில் அவரை பற்றி கேலி, கிண்டல்கள் அதிகரித்து வந்தது. இந்நிலையில், இந்த சம்பவத்தில் நடிகை குஷ்புவை தொடர்புப்படுத்தி, ஆபாசமான கிண்டல்கள் நடந்து வருகிறது.
இதற்கு நடிகை குஷ்பு தனது எக்ஸ் தளத்தில் பதிலளித்துள்ளது வைரலாகி வருகிறது. அதில் விஜய் ரசிகர் ஒருவர், “ஒரு வேலை படத்தில் ஒரு பாடலுக்கு குஷ்புவுடன் நடனம் ஆட கேட்டு இருப்பாரோ” என பதிவிட்டிருந்தார். அதற்கு குஷ்பு, “இல்லை, உங்கள் வீட்டில் இருந்து யாரையாவது ஆட வைக்கலாம்னு நினைத்தோம்” என அதிரடியாக பதிலளித்திருந்தார். மேலும், மற்றொரு பதிவில், “என் செருப்பு அளவு 41, அடி வாங்க தயாரா” என கேட்டுள்ளார். குஷ்புவின் இந்த பதிலுக்கு பிறகு நெட்டிசன்கள் அந்த பதிவுகளை நீக்கியுள்ளனர்.