உலக துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்தியாவின் சாம்ராட் தங்கம் வென்று அசத்தல்
Advertisement
கெய்ரோ: எகிப்து தலைநகர் கெய்ரோவில் ஐஎஸ்எஸ்எப் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டி நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் சாம்ராட் ராணா தங்கம் வென்றார். அவர் இறுதிப் போட்டியில் 243.7 புள்ளிகள் எடுத்து, சீனாவின் ஹு காய் மற்றும் இந்தியாவின் வருண் தோமரை வீழ்த்தி இந்தச் சாதனையை நிகழ்த்தினார்.
Advertisement