அதிகளவில் உப்பு சாப்பிடும் இந்தியர்கள்: பக்கவாதம், இதய நோய் வரும் என ஐசிஎம்ஆர் எச்சரிக்கை
ஒரு நபர் ஒரு நாளைக்கு 5 கிராமுக்கு குறைவாக உப்பு சாப்பிட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், நகர்ப்புறத்தில் வாழும் இந்தியர்கள் ஒருநாளைக்கு சுமார் 9.2 கிராம் உப்பும், கிராமப்புறத்தில் வசிப்பவர்கள் ஒருநாளைக்கு 5.6 கிராம் உப்பும் உட்கொள்கின்றனர். ஒருநாளைக்கு ஒரு டீஸ்பூன் உப்புதான் சாப்பிட வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
ஆனால் இந்தியர்கள் இதைவிட இருமடங்கு உப்பு எடுத்து கொள்கின்றனர். இதனால் அமைதியான உயிர்க்கொல்லிகளான உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம், இதய நோய் மற்றும் சிறுநீரக பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த பிரச்னைகளை தீர்க்க, உப்பை குறைப்பதற்கான வழிமுறைகளை கண்டறியும் பணியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் சோடியம் குறைந்த உப்பை பரிந்துரைப்பது பற்றி கவனம் செலுத்துகின்றனர். சோடியம் குறைந்த உப்பு ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. மேலும், இதயத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது” என தெரிவித்துள்ளது.