சேலம் சிறை தியாகிகள் நினைவாக மணி மண்டபம் அமைக்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சேலம்: சேலம் சிறை தியாகிகள் நினைவாக மணி மண்டபம் அமைக்கப்படும் என சேலத்தில் நடைபெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். வெல்க ஜனநாயகம் தலைப்பில் 2வது நாளாக நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்றுள்ளார். மேலும் மாநாட்டில் முதலமைச்சர் ஆற்றிய உரையில்; 'திராவிட இயக்கத்துக்கும் பொதுவுடமை இயக்கத்துக்கும் கொள்கை நட்பு உள்ளது. கொள்கை உறவு ஆழத்தை தலைமுறைகள் கடந்தும் சொல்ல வேண்டும். அண்ணன் முத்தரசன் கேட்டு நான் எதையும் தட்டி கழித்தது கிடையாது. தொழிலாளர்களின் பிரச்சனைக்காக எப்பொழுதும் முத்தரசன் மனுவோடு தான் வருவார்" என உரையாற்றினார்.