சேலம் மாவட்டத்தில் ஆக.9ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்..!!
சென்னை: சேலம் மாவட்டத்தில் ஆகஸ்ட்.9ம் தேதி மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், இணைந்து சேலம் மாவட்டத்தில் 09.08.2025, சனிக்கிழமை காலை 08.00 முதல் மாலை 03.30 வரை மகேந்திரா பொறியியல் கல்லூரி, மின்னாம்பள்ளி, சேலம் மாவட்டம் வளாகத்தில் நடைபெறும். ஆண்களும் பெண்களும் இந்த முகாமில் பங்கேற்கலாம். வேலை தேடும் இளைஞர்களுக்குத் தேவையான திறன்களை மேம்படுத்தும் வகையில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு அம்சங்கள்
*150 க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள்
*10000-க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு இளைஞர்கள் (ஆண்கள் / பெண்கள்) தேர்வு செய்யப்பட உள்ளனர்
*சேலம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்திலுள்ள முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு
*இலவச திறன் பயிற்சிக்கான பதிவுகள் மேற்கொள்ளுதல்
கல்வித்தகுதிகள்
*8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மஸி, பொறியியல் போன்ற கல்வி தகுதிகள்
மேலும் விவரங்களுக்கு
துணை இயக்குநர் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், சேலம். 0427-2401750, 99437 10025, 97888 80929, E-Mail: jobfairmccsalem@gmail.com. இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தாங்கள் கலந்துகொள்ள QR Code ஐ ஸ்கேன் செய்யவும் அல்லது https://www.tnprivatejobs.tn.gov.in
இணையத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.