அறிமுக வீரராக களமிறங்கிய சாய் சுதர்சன்
அவரது சராசரி ரன் குவிப்பு, 39.93. அதிகபட்ச ஸ்கோர் 213 ரன். ஐபிஎல் போட்டிகளில் குஜராத் அணிக்காக ஆடிய சாய் சுதர்சன், 15 போட்டிகளில் 759 ரன் குவித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றி சாதனை படைத்தார். நெருக்கடியான சூழலில் அவரது ஆடும் திறன் அனைவரையும் கவர்ந்தது. அதனால், தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்த சாய் சுதர்சன், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் ஆடும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதையடுத்து, நேற்று துவங்கிய இங்கிலாந்து அணியுடனான போட்டி, சாய் சுதர்சனுக்கு அறிமுக போட்டியாக அமைந்தது.