செயில் நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் டிரெய்னீஸ்
பணி: மேனேஜ்மென்ட் டிரெய்னீ. மொத்த இடங்கள்: 124.
பொறியியல் பாட வாரியாக காலியிடங்கள் விவரம்:
(கெமிக்கல்-5, சிவில்-14, கம்ப்யூட்டர்-4, எலக்ட்ரிக்கல்-44, இன்ஸ்ட்ருமென்டேஷன்-7, மெக்கானிக்கல்-30, மெட்டாலர்ஜி-20.)
சம்பளம்: ரூ.50,000- ரூ.1,60,000.
வயது: 05.12.2025 தேதியன்று பொது பிரிவினர்கள் 28 வயதிற்குள்ளும், ஒபிசியினர் 31 வயதிற்குள்ளும், எஸ்சி/எஸ்டியினர் 33 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 10 ஆண்டுகள் அதிகபட்ச வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: கெமிக்கல் இன்ஜினியரிங்/ சிவில் இன்ஜினியரிங்/ எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்/ இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங்/மெக்கானிக்கல் இன்ஜினியரிங்/மெட்டலர்ஜி இன்ஜினியரிங்/கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் ஆகிய ஏதாவதொரு பொறியியல் பாடப்பிரிவு அல்லது அதற்கு இணையான பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் பி.இ., முடித்திருக்க வேண்டும். பி.இ., படிப்பில் பொது மற்றும் ஓபிசியினர் குறைந்தது 65% மதிப்பெண்களுடனும், எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள் குறைந்தது 55% மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கட்டணம்: பொது மற்றும் ஓபிசியினர், பொருளாதார பிற்பட்டோர் ஆகியோருக்கு ரூ.1050/-, எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/ முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.300 மட்டும். இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
செயில் நிறுவனத்தால் நடத்தப்படும் சிபிடி எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள், நேர்முகத் தேர்வு, குழு விவாதம் ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். நேர்முகத் தேர்வு பற்றிய விவரம் இ.மெயில் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும்.
பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஒரு வருடம் பயிற்சியளிக்கப்படும். பயிற்சியின் போது மாதம் ரூ.50 ஆயிரம் உதவித் தொகையாக வழங்கப்படும். பயிற்சிக்கு பின் நிரந்தர பணி வழங்கப்படும். சிபிடி தேர்வு ஜனவரி 2026ல் நடைபெறும்.
www.sail.co.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.12.2025.